2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை

#SriLanka #Parliament #budget #AnuraKumaraDissanayake
Thamilini
2 hours ago
2027 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை

2027 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு திட்டத்தின் ஒரு பகுதியாக ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஒதுக்கீட்டு சட்டவுமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மற்றும் 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தல் ஆகியவை நவம்பர் 12-ஆம் திகதி நடைபெறவுள்ளன.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி வரவு-செலவுத் திட்ட உரையை நிகழ்த்துவார். 

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும். 

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 20 ஆம் திகதியன்று  மாலை 6 மணிக்கு நடைபெறும். இரண்டாம் வாசிப்பைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் குழு நிலைக்குச் செல்லும். 

அங்கு தனித்தனி செலவினத் தலைப்புகள் பரிசீலிக்கப்படும். குழு நிலை விவாதம் நவம்பர் 21 ஆம் திகதி  முதல் டிசம்பர் 14 திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறும். 

வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதியன்று  மாலை 6 மணிக்கு நடைபெறும். 

இதன் மூலம் நாடாளுமன்ற வரவு-செலவுத் திட்டச் செயல்முறை நிறைவடையும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!