மீண்டும் CID யின் காவலில் எடுக்கப்பட்டார் சுரேஷ் சாலே

#SriLanka #Easter Sunday Attack #custody #Suresh Sallay
Thamilini
1 hour ago
மீண்டும் CID யின் காவலில் எடுக்கப்பட்டார் சுரேஷ் சாலே

அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சாலே மீண்டும்  குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் வசம் எடுக்கப்பட்டுள்ளார். 

சாலேவுக்கு சிகிச்சை வழங்கிய 10 மருத்துவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி அவரின் உடல்நிலை குறித்து விளக்கியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். 

தடுப்புக் காவலில் இருந்தபோது, ​​தனக்கு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் கூறி சல்லே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 

பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு 100 நாட்களுக்கும் மேலாக மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!