புதிதாக இரு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
#SriLanka
#AnuraKumaraDissanayake
#Judge
#Appoint
#HighCourt
Thamilini
1 hour ago
இரு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நேற்றைய தினம் ஜனாதிபதி அனுரகுமாரா திஸாநாயக்கவினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேல்நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க மற்றும் எச். எம். ஆர். எம். திலகரத்ன ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பதவிப்பிரமாணம் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிகள் இரண்டுக்காக குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
