அனைவருக்கும் கௌரவமான வீடு – புதிய வீடமைப்புக் கொள்கை மாற்றங்கள் முன்னெடுப்பு

#SriLanka #PrimeMinister #LANKA4 #Harini Amarasooriya
Abi
2 hours ago
அனைவருக்கும் கௌரவமான வீடு – புதிய வீடமைப்புக் கொள்கை மாற்றங்கள் முன்னெடுப்பு

சமூகத்தின் உண்மையான பங்களிப்புடன் ஒவ்வொருவரும் தமக்கென கௌரவமான வசிப்பிடத்தை அமைத்துக்கொள்வதற்குத் தேவையான பலத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நிலையான வீடமைப்புக் கொள்கையை உருவாக்கும் நோக்கில், ஒன்பது அடிப்படைக் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு பல்வேறு புதிய கொள்கை மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு என்பது ஒவ்வொரு பிரஜையினதும் அடிப்படை மனித உரிமை என வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், எவரையும் கைவிடாத வகையில் தரவுகளின் அடிப்படையிலான விஞ்ஞானபூர்வமான அபிவிருத்தியை முன்னெடுப்பதே நோக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றாடல் நிலைபேறுத்தன்மை, உயர் கட்டுமானத் தரம் மற்றும் பொருளாதார ரீதியாக மக்களால் தாங்கிக்கொள்ளக்கூடிய தன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்ட வீடமைப்புத் தொகுதியை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான உலகக் குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புத் திட்டத்தின் ஏற்பாட்டின் கீழ் “தேவையான அளவுக்கு – அனைவருக்கும் புகலிடம்” என்ற தொனிப்பொருளில், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு நேற்று (05) கொழும்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானதும் தரமானதுமான வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், எதிர்கால சந்ததியினருக்கும் பயனளிக்கும் வகையில் நிலையான வீடமைப்பு முறைமையொன்றை உருவாக்குவதற்கான கொள்கை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!