அனோஜனின் மரண தண்டனையை எதிர்த்து சட்ட நடவடிக்கை: சவூதிக்கு விரையும் இலங்கை குழு

#SriLanka #Death #LANKA4 #SaudiArabia #Legal #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #SivarasaAnojan
Abi
1 hour ago
அனோஜனின் மரண தண்டனையை எதிர்த்து சட்ட நடவடிக்கை: சவூதிக்கு விரையும் இலங்கை குழு

சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான சட்ட வழிமுறைகளை ஆராய, ஐவரைக் கொண்ட உயர்மட்டக் குழு நாளை சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி உள்ளிட்ட ஐவர் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.

சவூதி   அரேபியாவில் உள்ள உள்ளூர் சட்டத்தரணிகளைச் சந்தித்து அனோஜனின் வழக்கு நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதுடன், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டை சமர்ப்பிப்பதற்கான சட்ட நடைமுறைகள் குறித்தும் குழுவினர் ஆராயவுள்ளனர்.

மேலும், சவூதி சட்ட விதிகளுக்கு அமைவாக மேன்முறையீடு தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக உள்ளூர் சட்டப் பிரதிநிதிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவுள்ளன.

இதனிடையே, அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை குறைப்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!