27 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த காங்கோ குடியரசு
காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ நீதிமன்றம் ஒன்று, 'கோழைத்தனம்' காட்டியதற்காக 27 காங்கோ ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
AFC/M23 கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையின்போது முன்வரிசைப் பகுதியிலிருந்து பின்வாங்கியதற்காக இந்த வீரர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
தெற்கு கிவு (South Kivu) மாகாணத்தில் உள்ள உவிரா (Uvira) ராணுவ நீதிமன்றத்தில், 21வது சிம்பா பட்டாலியனைச் (Simba Battalion) சேர்ந்த குறைந்தது 112 வீரர்களுக்கான வழக்கு விசாரணை செப்டம்பர் 15 அன்று தொடங்கியது.
ஆகஸ்ட் மாதத்தில் கிழக்கு காங்கோவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையின்போது, உத்தரவுகளை மீறியதாகவும் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
உத்தரவுகளை மீறிய குற்றத்திற்காக 54 வீரர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் மேலும் 10 பேருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
போதுமான ஆதாரங்கள் இல்லாததால், ஐந்து பெண்கள் உட்பட குறைந்தது 21 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.