கலகொட அத்தே ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

#SriLanka #ARREST #CourtOrder #Prison #LANKA4 #Monk #L4
Prasu
3 hours ago
கலகொட அத்தே ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை அடிப்படையில் கைது செய்யப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை, நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், குறித்த பிடியாணை தொடர்பான நடவடிக்கைகளுக்காக, ஞானசார தேரரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட தொடர்பான வழக்கின் விசாரணையின் போது இடம்பெற்ற ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!