பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் - சுமந்திரன் அறிவிப்பு

#SriLanka #M. A. Sumanthiran #ADDA #Terrorism Act #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் - சுமந்திரன் அறிவிப்பு

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு எதிராக அடுத்த வாரம் முதல் பரந்துபட்ட மக்கள் பிரசாரத்தை ஆரம்பிக்கவிருப்பதாக சர்வஜன நீதி அமைப்பின் பிரதிநிதி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில், பயங்கரவாதம் எனும் பதத்துக்குப் பரந்துபட்ட வரைவிலக்கணம் வழங்கப்பட்டிருப்பதுடன் சந்தேகநபரைத் தேடுதல், கைதுசெய்தல் என்பன தொடர்பில் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களும் ஆயுதமேந்திய படையினருக்கும் உரித்தாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அரசியல் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள், 'பயங்கரவாதத்தடைச்சட்டமோ அல்லது அதனைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமோ ஜனநாயக நாடொன்றுக்கு எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. மாறாக இது பெரும் அடக்குமுறையின் ஒரு ஆரம்பப்புள்ளியாகவே அமையும்' எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அதுமாத்திரமன்றி கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்களாணையைப் பெற்ற தற்போதைய அரசாங்கம், புதிய சட்டங்கள் மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமைவதை உறுதிப்படுத்துவதற்குத் தவறுவது ஏன்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு எதிராக அடுத்த வாரம் முதல் பரந்துபட்ட மக்கள் பிரசாரத்தை ஆரம்பிக்கவிருப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!