நாய்கள் தொடர்பான சட்ட வரைவு திருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தல்

#SriLanka #Law #Dog #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
நாய்கள் தொடர்பான சட்ட வரைவு திருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தல்

நாய்களுக்குத் தடுப்பூசி போடுதல் மற்றும் பதிவு செய்தல் தொடர்பான சட்ட வரைவில் உள்ள பல பிரிவுகள் திருத்தப்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் லசித்த கண்ணங்கரா, நேற்று (02) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த விளக்கத்தை அளித்தார். 

 வெறிநாய்க்கடி நோயை ஒழிப்பதற்கும் நாய்களைப் பதிவு செய்வதற்கும் ஒரு புதிய சட்ட வரைவை அறிமுகப்படுத்த பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

 நாய்களுக்குத் தடுப்பூசி போடுவதை ஒழுங்குபடுத்துதல், நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வணிக நோக்கங்களுக்காக நாய்களை இனப்பெருக்கம் செய்வதைக் கட்டுப்படுத்துதல் ஆகியவையே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும். 

 இந்த சட்ட வரைவின்படி, நிர்வாக எல்லைகளுக்குள் உள்ள ஒவ்வொரு நாய்க்கும் ஆண்டுதோறும் வெறிநாய்க்கடி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடுவதும், பதிவு செய்வதும் கட்டாயமாகிறது. 

 சட்ட வரைவின் நான்காவது பிரிவில் கூறப்பட்டுள்ளபடி, நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்க்கு எதிரான தடுப்பூசியை ஒரு கால்நடை மருத்துவரால் அல்லது அவரது மேற்பார்வையின் கீழ் மட்டுமே போட முடியும். 

 இருப்பினும், இந்த விதிமுறையானது, நாட்டில் வெறிநாய்க்கடி மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!