இஸ்ரேலில் வேலை வாய்ப்புகள் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி - நபர் ஒருவர் கைது
இஸ்ரேலில் வேலை வாய்ப்புகள் வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடம் இருந்து 1.2 மில்லியன் ரூபாயை மோசடி செய்த நபர், ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தின் வேட்பாளராக இருந்தவர் என்றும், அவர் முந்தைய அரசாங்கத்தின் போது ஜனாதிபதி ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த மோசடியைச் செய்வதற்கு முன்பு, சந்தேக நபர் முறைப்பாட்டாளரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அலுத்கடே எண் 5 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இமாதம் 14ஆம் திகதிவரை விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளைசந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான போலி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.