மத கலவரத்தை தூண்ட முயன்ற 21 வயது சிங்கள இளைஞர் கைது

#SriLanka #ARREST #LANKA4 #Youngster #Sinhala #Religion #L4 #Riot
Prasu
1 hour ago
மத கலவரத்தை தூண்ட முயன்ற 21 வயது சிங்கள இளைஞர் கைது

முஸ்லிம்களைப் போன்று வேடமிட்டு வாட்ஸ் அப் குழு மூலம் புத்தர் படங்களை இழிவாக சித்தறித்து பதிவிட்ட 21 வயது சிங்கள இளைஞனை CID கைது செய்து விளக்கமறியலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

புத்த பெருமானின் உருவப் படங்களை ஆபாசமான மற்றும் இழிவான முறையில் சித்தரித்து வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்ததாகவும், தம்புள்ளை விஹாரை, ஸ்ரீ தலதா மாளிகை, ஸ்ரீ மஹா போதி உள்ளிட்ட புனித தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டில் 21 வயதுடைய சிங்கள இளைஞர் ஒருவர் எதிர்வரும் ஒக்டோபர் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இப்பாகமுவை பகுதியைச் சேர்ந்த ஜே.எம். அமோத்ய மதிஷ தமோஷ என்பவரே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ( CID ) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

தம்புள்ளை விஹாரையின் விகாராதிபதி கலாநிதி தம்மகம ஆனந்த அனுநாயக்க தேரர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விசாரணைகளில், குறித்த இளைஞர் பௌத்த மதத்திற்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட்ட WhatsApp குழுவின் Admin (நிர்வாகி) ஆக செயற்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய்யான பதிவுகளை பதிவிட்டு சிங்கள முஸ்லிம் கலவரம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் பதிவிடப்பட்டுள்ள இந்த பதிவு சிங்கள சமூகத்துக்கு இடையில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பின்னால் இருக்கின்ற சதிவலை சூத்திரதாரி யார்? இந்த இளைஞனை தூண்டியவர்கள் யார்? என்பதை கண்டுபிடிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!