மத்தள விமான நிலைய தங்க விவகாரம்: மஹிந்த ராஜபக்சவின் உத்தரவு என தகவல்

#SriLanka #Mahinda Rajapaksa #Airport #LANKA4 #report #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
மத்தள விமான நிலைய தங்க விவகாரம்: மஹிந்த ராஜபக்சவின் உத்தரவு என தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில், மத்தள மஹிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு சட்டவிரோதமாக விமானம் மூலம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்கள் அடங்கிய தொகுதி ஒன்று விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தங்கத் தொகுதி, அப்போது ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவின் உறவினர் ஒருவரால் கொண்டுவரப்பட்டதாகவும், அக்காலத்தில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்கிய உத்தரவின் பேரில் அது விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள், ராவய பத்திரிகையின் முன்னாள் ஊடகவியலாளர் லசந்த ருஹுணகே எழுதிய “ராஜபக்ச நிறுவனம்” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அக்காலத்தில் சுங்க அதிகாரியாகப் பணியாற்றிய ஜகத் விஜேவீர மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு குறித்த தங்கத் தொகுதி விடுவிக்கப்பட்டதாகவும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2013 ஜூன் 12ஆம் திகதி மத்தள விமான நிலையத்தை வந்தடைந்த UC827 இலக்க விமானத்தில் குறித்த தங்கத் தொகுதி கொண்டுவரப்பட்டதாகவும் லசந்த ருஹுணகே தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!