வலிகாமம் வடக்கு காணிகள் விடுவிப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் கேள்வி

#SriLanka #Gajendrakumar Ponnambalam #LANKA4 #land #North #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
வலிகாமம் வடக்கு காணிகள் விடுவிப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் கேள்வி

வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிப்பதாக உறுதியளித்துவிட்டு, அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வலிகாமம் வடக்கு காணிகள் விடுவிப்பு தொடர்பில் காணி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெளியிட்ட கருத்துகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்போது, இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாக்குறுதியளித்திருந்ததாக கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். 

எனினும், அந்த வாக்குறுதி வழங்கப்பட்டு இரு ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும், காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தையிட்டி, பலாலி, வாசவிளான் மற்றும் மயிலிட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தமது பூர்வீகக் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி தொடர்ச்சியாக வாராந்த போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் மாத இறுதிக்குள் காணிப் பிரச்சினைக்கு சாதகமான தீர்வு எட்டப்படும் என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்திருந்த போதிலும், குறிப்பிடத்தக்க அளவில் காணி விடுவிப்பு இடம்பெறவில்லை என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் வடக்கில் 2,000 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதாகவும், சில ஏக்கர் காணிகளை மாத்திரம் விடுவித்து பிரச்சினை தீர்க்கப்பட்டதாக அரசாங்கம் காட்ட முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பலாலியில் தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த பணிகளை நிறுத்துமாறு யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருந்த போதிலும், அதனை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை எனவும் கஜேந்திரகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், மக்கள் இன்னும் வாடகை வீடுகளில் வாழ வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் விவசாயக் காணிகளில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு பெறும் வருமானம் தொடர்பிலும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!