UAE தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு
#SriLanka
#PrimeMinister
#LANKA4
#UAE
#Ambassador
#ADDA
#Harini Amarasooriya
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தூதுவர் காலித் நாசர் அல் அமேரி (Khaled Nasser Al Ameri) அவர்களை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, இலங்கை – ஐக்கிய அரபு அமீரக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் இருதரப்பினரும் கலந்துரையாடினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டது.