2027 முதல் குழந்தை திருமணத்தைத் தடை செய்த கலிபோர்னியா

#children #America #Age #Law #LANKA4 #Marriage #Banned #L4
Prasu
21 hours ago
2027 முதல் குழந்தை திருமணத்தைத் தடை செய்த கலிபோர்னியா

அமெரிக்காவின் 32 மாநிலங்களில் இன்னும் சட்டப்பூர்வமாக உள்ள குழந்தை திருமண முறைக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில், கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் இது தொடர்பான மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார்.

2027ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய சட்டத்தின்படி, கலிபோர்னியாவில் திருமணம் செய்துகொள்ளவோ ​​அல்லது இல்லற உறவில் இணையவோ குறைந்தபட்ச வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இம்மாநிலத்தில் வயது வரம்பு எதுவும் இல்லை; பெற்றோரின் சம்மதம் மற்றும் நீதிபதியின் ஒப்புதல் இருந்தால் ஒரு குழந்தைக்குத் திருமணம் செய்து வைக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தடை குறித்துக் கருத்து தெரிவித்த ஆளுநர் நியூசம், "இளம் கலிபோர்னியர்களையும் சிறார்களையும் பாதுகாப்பதற்காக நீண்ட காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கை இது" என்று குறிப்பிட்டுள்ளார். 

தன்னைவிட மூன்று தசாப்தங்கள் (30 ஆண்டுகளுக்கும் மேலாக) மூத்தவரான நடிகர் டக் ஹட்சின்சனைத் தனது 16வது வயதில் திருமணம் செய்துகொண்டு சர்ச்சையில் சிக்கிய மாடல் அழகி கோர்ட்னி ஸ்டோடனுடன் இணைந்து அவர் இந்த மசோதாவில் கையெழுத்திட்டார். 

கலிபோர்னியாவில் கிடைத்த இந்த வெற்றிக்குப் பிறகும், அமெரிக்கா முழுவதும் குழந்தை திருமணங்களைத் தடை செய்வதற்கான தனது போராட்டத்தைத் தொடரப்போவதாக ஸ்டோடென் உறுதியளித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!