2026 ஆம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வசூல் இலக்கை அடைந்தது இலங்கை சுங்கத்துறை

#SriLanka #customs #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
2026 ஆம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வசூல் இலக்கை அடைந்தது இலங்கை சுங்கத்துறை

2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படி தனது வருவாய் வசூல் இலக்கான 02 டிரில்லியனை தாண்டிவிட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. 

அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் இத்துறையால் வசூலிக்கப்பட்ட மொத்த வருவா 2040 பில்லியன் ஆகும்.

2025-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட ரூ. 1,642 பில்லியனுடன் ஒப்பிடும்போது இது 398 பில்லியன் அதிகமாகும். 

உள்நாட்டு வருவாய்த் துறையின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர வருவாய் மதிப்பீடு   2,401 பில்லியன் ஆகும், இதில் செப்டம்பர் 30 நிலவரப்படி 85 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. 

 இதற்கிடையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலிக்கப்பட்ட ரூ. 216 பில்லியனுடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும்  72 பில்லியன் அதிகரித்து  288 பில்லியன் ரூபாய் வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!