புங்குடுதீவு பிரதான வீதியில் முதன்முறையாக சூரிய ஒளி வீதி விளக்குகள்

#SriLanka #Road #LANKA4 #Punkudutivu #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
புங்குடுதீவு பிரதான வீதியில் முதன்முறையாக சூரிய ஒளி வீதி விளக்குகள்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம் — புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தில், நீண்டகாலமாக மின்சார இணைப்பு இல்லாத பிரதான வீதிப் பகுதியில் முதன்முறையாக சூரிய ஒளி மூலம் இயங்கும் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம்) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் (சுவிஸ்) நடப்பு ஆண்டு நிர்வாகம் வழங்கிய ரூபாய் 2,65,000 நிதியுதவியின் மூலம் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புங்குடுதீவு மடத்துவெளி மாற்றுத்திறனாளிகள் நலன்புரி நிலையத்திலிருந்து கண்ணகை அம்மன் கோவில் வரவேற்புத் தூபி வரையிலான பிரதான வீதியில், இதுவரை மின்சார இணைப்பு இல்லாத நிலையில், ஒன்பது சூரிய ஒளி வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு விளக்கும் 400 வாட்ஸ் திறன் கொண்டதாகவும், மொத்தமாக ரூபாய் 2,25,000 பெறுமதியுடையதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குறித்த வீதியின் எதிர்ப்புறமாக தற்போது கள்ளியாறு நன்னீர் சேகரிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மடத்துவெளி–வல்லன் இணைப்புச் சந்தியில் ரூபாய் 30,000 பெறுமதியான இரண்டு 150 வாட்ஸ் மின்விளக்குகளும், மாற்றுத்திறனாளிகள் நலன்புரி நிலையத்திற்கு முன்பாக ரூபாய் 10,000 பெறுமதியான ஒரு 50 வாட்ஸ் மின்விளக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

வேலணை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இச்செயற்பாட்டில், சூழகம் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான திரு. ராஜேந்திரம் கஜேந்திரன் மற்றும் திரு. கருணாகரன் குணாளன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இத்திட்டத்தின் மூலம் இரவு நேரங்களில் குறித்த பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்களுக்கு மேலதிக பாதுகாப்பும் வசதியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!