நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் கொட்டித் தீர்க்கும் மழை

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் கொட்டித் தீர்க்கும் மழை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பொழிவு பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடியோ, அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காலை வேளையில் மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!