நிலையான கலாசாரத்துடன் கூடிய சுற்றுலாத் துறையின் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான தேசிய மாநாடு

#SriLanka #Digital #LANKA4 #Tourism #national #cultural #ADDA #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
நிலையான கலாசாரத்துடன் கூடிய சுற்றுலாத் துறையின் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான தேசிய மாநாடு

“சுற்றாடலுக்கும் கலாசாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், உள்ளூர் சமூகத்தை வலுவூட்டும் சுற்றாடல் நேயமிக்க சுற்றுலாத் துறையை ஊக்குவித்து, அதனூடாகக் கிடைக்கும் வருமானம் கிராமத்தின் சிறிய அளவிலான தொழில்முனைவோர் வரை நியாயமான முறையில் சென்றடைவதை உறுதிசெய்வதே அரசாங்கத்தின் முதன்மை எதிர்பார்ப்பாகும்.

” செப்டெம்பர் 27ஆம் திகதி மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு, மேல் மாகாண சுற்றுலாச் சபை மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் முதுகலை நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த “நிலையான கலாசாரத்துடன் கூடிய சுற்றுலாத் துறையின் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான தேசிய மாநாட்டில்” கலந்துகொண்டதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி என்பது வெறுமனே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்ல. எமது இயற்கை வளங்கள், வரலாற்று மரபுகள் மற்றும் கலாசாரப் பெறுமதிகளைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதுடன், அதன் பொருளாதாரப் பயன்கள் உள்ளூர் மக்களையும் சென்றடையச் செய்வதே நிலையான சுற்றுலாத்துறையின் அடிப்படையாகும்.

குறிப்பாக கிராம மட்டத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், கைவினைஞர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு சுற்றுலாத்துறை புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி, எமது நாட்டின் இயற்கை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகளவில் அறிமுகப்படுத்துவதுடன், உள்ளூர் சமூகங்களின் பொருளாதார வலுவூட்டலையும் உறுதிசெய்யும் நிலையான சுற்றுலா வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!