சிங்கப்பூரில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு விருது வழங்கி கௌரவிப்பு

#SriLanka #Red Cross #LANKA4 #President #Singapore #Award #L4
Prasu
1 hour ago
சிங்கப்பூரில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு விருது வழங்கி கௌரவிப்பு

சிங்கப்பூரில் உள்ள நோவோடெல் (Novotel) ஹோட்டலில் அண்மையில் (22 ஆம் திகதி) நடைபெற்ற சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் விருது வழங்கும் விழாவில், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு (SLRCS) "சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் சிறப்புமிக்க நண்பர்" (Distinguished Friend of Singapore Red Cross) எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் குடியரசின் ஜனாதிபதியும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் புரவலருமான அதிமேதகு தர்மன் சண்முகரத்தினம் அவர்களால், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர் திரு. ஜகத் அபேசிங்க அவர்களிடம் இவ்விருது வழங்கப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றிற்கு இடையிலான நீண்டகாலக் கூட்டாண்மை, பரஸ்பர ஆதரவு மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பு ஆகியவற்றையும், அதேவேளை பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்குச் சேவையாற்றுவதிலும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் இரு அமைப்புகளும் கொண்டுள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் இந்த உயரிய அங்கீகாரம் பிரதிபலிக்கிறது என்று திரு. ஜகத் அபேசிங்க குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகச் சபையைச் சேர்ந்த டாக்டர் அமில கங்கனம்கே மற்றும் திருமதி குமாரி கொத்தலாவல ஆகியோரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!