காங்கோ குடியரசில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 பேர் மரணம்

#Death #Accident #LANKA4 #Boat #Rescue #Missing #Congo #L4
Prasu
1 hour ago
காங்கோ குடியரசில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 பேர் மரணம்

ஜனநாயகக் காங்கோ குடியரசின்(DRC) டாங்கனிகா ஏரியில்பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

படகில் பயணித்த மற்ற பயணிகளைக் கண்டறியும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் காங்கோவின் டாங்கனிகா மாகாணப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நோரிஸ் முலோங்கோயி தெரிவித்துள்ளார்.

காங்கோவின் மாபேரா கிராமத்திற்கு அருகே சுமார் 100 பயணிகளுடனும் சரக்குகளுடனும் சென்றபோது இந்தப் படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.

டான்சானியாவில் உள்ள ‘கிகோமா’ துறைமுகத்தில் இருந்து காங்கோவில் உள்ள ‘கலேமி’ நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!