புரட்டாதி சனியன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் இந்துக்கள் தங்குதடையின்றி வழிபட நீதிமன்றம் அனுமதி

#SriLanka #Vavuniya #Hindu #CourtOrder #Temple #LANKA4 #L4
Prasu
2 hours ago
புரட்டாதி சனியன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் இந்துக்கள் தங்குதடையின்றி வழிபட நீதிமன்றம் அனுமதி

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த வாதங்களைத் தொடர்ந்து, புரட்டாதி சனியன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் இந்துக்கள் தங்குதடையின்றி வழிபட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்திய நீதிபதி, இவ்வாறான வழக்குகளைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது, வழிபாட்டு உரிமை மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சுமந்திரன் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!