சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழுக்கு புதிய டிஜிட்டல் முறை!

#SriLanka #Medical #Digital #LANKA4 #certificate #system #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #driver's licenses
Lakhi
1 hour ago
சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழுக்கு புதிய டிஜிட்டல் முறை!

சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்குத் தேவையான மருத்துவச் சான்றிதழ்களை வழங்குவதற்கான புதிய டிஜிட்டல் முறைமை நாளை (24) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் கிளிஃபோர்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், விண்ணப்பதாரர்கள் எந்தவொரு தொலைபேசி வலையமைப்பின் ஊடாகவும் மருத்துவப் பரிசோதனைக்கான நேரத்தை முன்பதிவு செய்ய முடியும்.

இந்த நேர ஒதுக்கீட்டுச் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுடன், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதற்கு மேலதிக கட்டணம் எதுவும் அறவிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறை, சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் பெறும் நடைமுறையை மேலும் இலகுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!