கல்முனை வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தள பதிவுகளை எதிர்த்து வழக்கு பதிவு
கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட ஹிஜாப் விவகாரம் தொடர்பான பதிவுகள், அவதூறான கருத்துகள் மற்றும் சமூக மோதலைத் தூண்டும் வகையிலான கூற்றுகள் தொடர்பில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் (Online Safety Act) கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் , முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட 6 நபர்களுக்கு எதிராகவும், 2 சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான விசாரணையின்போது, தடையாணை அல்லது நிபந்தனையுடன்கூடிய கட்டளை (Conditional Order) பிறப்பிப்பது குறித்து பரிசீலிப்பதற்காக, வழக்கின் மீதான முடிவு எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.