ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இலங்கை மகளிர் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் , மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி சார்பில், ஸ்மிர்த்தி மந்தனா 79 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் 217 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 15.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 69 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 147 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சமரி அத்தபத்து 29 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இறுதியில், 2026ம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்க பதக்கமும் இலங்கை அணி வெள்ளி பதக்கமும் பாகிஸ்தான் அணி வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளது.