அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசிடம் 5 ஊடக அமைப்புகள் கோரிக்கை!

#SriLanka #LANKA4 #SaudiArabia #Media #organization #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
2 hours ago
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசிடம் 5 ஊடக அமைப்புகள் கோரிக்கை!

மதநிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மனிதநேய அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றுமாறு நாட்டின் பிரதான ஐந்து ஊடக அமைப்புகள் சவூதி அரசாங்கத்திடம் கூட்டுக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளன.

சுதந்திர ஊடக இயக்கம் (FMM), தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பு (SAWM), இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (TWJA), தமிழ் ஊடகக் கூட்டமைப்பு (TMA) மற்றும் இலங்கை முஸ்லிம் ஊடக பேரவை (SLMMF) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

சவூதி அரேபியாவின் நீதித்துறை நடைமுறைகளை முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ள ஊடக அமைப்புகள், இந்த விவகாரத்தில் ஆழமான மனிதநேயப் பின்னணியும் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளன.

மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, மன்னிப்பு மற்றும் கருணை ஆகிய உயரிய இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு, பொது மன்னிப்பு வழங்கி அனோஜனின் உயிரைப் பாதுகாக்குமாறு குறித்த ஊடக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன், இலங்கை அரசாங்கமும் வெளியுறவு அமைச்சும் சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் உயர்நிலை பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து, அனோஜனைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்துவர அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் ஊடக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

மக்களுக்கிடையிலான இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், ஆபத்தான நிலையில் உள்ள ஒரு இலங்கையரின் உயிரைப் பாதுகாக்கவும் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என ஊடக அமைப்புகளின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!