லஞ்ச் சீட், ‘சிலி-சிலி’ பைகள் தொடர்பில் 104 விதிமீறல்கள் கண்டுபிடிப்பு!

#SriLanka #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Riya
1 hour ago
லஞ்ச் சீட், ‘சிலி-சிலி’ பைகள் தொடர்பில் 104 விதிமீறல்கள் கண்டுபிடிப்பு!

நாடு தழுவிய ரீதியில் கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி 22 மாவட்டங்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட சிறப்புச் சோதனைகளில், லஞ்ச் சீட் மற்றும் ‘சிலி-சிலி’ பொலித்தீன் பைகள் தொடர்பில் 104 விதிமீறல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டறிந்துள்ளது.

இதில் லஞ்ச் சீட் தொடர்பில் 43 விதிமீறல்களும், ‘சிலி-சிலி’ பைகள் தொடர்பில் 58 விதிமீறல்களும் கண்டறியப்பட்டுள்ளன.

2019 நவம்பர் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட 70ஆம் இலக்க வர்த்தமானி கட்டளைக்கு அமைவாக லஞ்ச் சீட்கள் மற்றும் உணவு சுற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

மேலும், 2025 ஒக்டோபர் 1ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி கட்டளையின் படி, ‘சிலி-சிலி’ பைகளை நுகர்வோருக்கு இலவசமாக வழங்க முடியாது. 

அவை விற்பனை செய்யப்படுமாயின், அதன் விலை தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!