கேகாலையில் உச்சபட்ச மழைவீழ்ச்சி பதிவு

#SriLanka #weather #Rain #Kegalle #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
கேகாலையில் உச்சபட்ச மழைவீழ்ச்சி பதிவு

கடந்த சில மணிநேரங்களில் கேகாலை மாவட்டத்தின் மாலிபோட (Maliboda) பகுதியில் அதிகபட்சமாக 104 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 அதேவேளையில், கேகாலை மாவட்டத்தின் கலுபஹன (Kalupahana) பகுதியில் 95.5 மி.மீ மழையும், நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா பகுதியில் 85.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

 குருநாகல் மாவட்டத்தின் பொல்பிதிகம (Polpithigama) பகுதியில் 85.0 மி.மீ மழையும், இரத்தினபுரி மாவட்டத்தின் தம்மல்ல (Dammulla) பகுதியில் 82.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

 தற்போது நிலவும் தீவிரமான தென்மேற்கு பருவமழை நிலைமைகள் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

 அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சில இடங்களில் சுமார் 100 மி.மீ வரையிலான ஓரளவு பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!