சமூக ஊடகங்களில் அநாகரிகமாக நடப்பவர்களுக்கான எச்சரிக்கை
#SriLanka
#people
#Abuse
#LANKA4
#Warning
#Social Media
#L4
Prasu
3 hours ago
முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆபாச வார்த்தைகள், தூசனங்கள் அல்லது பொதுவெளிக்கு உகந்தது அல்லாத வகையில் பின்னூட்டம் (𝑪𝒐𝒎𝒎𝒆𝒏𝒕𝒔) இடுபவரா நீங்கள்?
இனி உங்கள் கணக்கு (𝑨𝒄𝒄𝒐𝒖𝒏𝒕) முடக்கப்படுவது மட்டுமல்ல, நீங்கள் சிறைக்கும் செல்ல நேரிடலாம்! பொதுவெளியில் பிறரை அவதூறாகப் பேசுபவர்களை மற்றும் படங்களை ஆபாசமான முறையில் பதிவிட்டு இனவெறியைத் தூண்டும் காடையர்களுக்கு எதிராக இப்போது சட்டப்படி மிக எளிதாகப் பொலிஸில் முறைப்பாடு (𝑪𝒐𝒎𝒑𝒍𝒂𝒊𝒏𝒕) செய்ய முடியும்.
இனி யாராவது உங்களை அல்லது உங்களது தலைவர்களை, கொள்கைகளை ஆபாசமாக விமர்சித்தால், உடனே உணர்ச்சிவசப்பட்டு பதிலுக்குப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.
5 முக்கிய வழிமுறைகளை பின்பற்றி அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்:
- 𝑺𝒄𝒓𝒆𝒆𝒏𝒔𝒉𝒐𝒕 எடுக்கவும்: சம்பந்தப்பட்ட நபர் பதிவிட்ட ஆபாசமான பின்னூட்டம் அல்லது பதிவை உடனடியாக ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொள்ளுங்கள்.
- 𝑼𝑹𝑳-ஐ சேமிக்கவும்: அந்த நபரின் 𝑷𝒓𝒐𝒇𝒊𝒍𝒆 𝑳𝒊𝒏𝒌 (𝑼𝑹𝑳) மற்றும் அவர் பதிவிட்ட குறிப்பிட்ட 𝑷𝒐𝒔𝒕 𝑼𝑹𝑳 ஆகியவற்றை நகலெடுத்து (𝑪𝒐𝒑𝒚) பத்திரப்படுத்துங்கள். (அவர்கள் கணக்கை நீக்கினாலும் கண்டறிய இது உதவும்).
- விவரங்களைப் பதியவும்: அந்தப் பதிவு இடப்பட்ட தேதி, நேரம் மற்றும் பயன்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகளைத் தனியாகக் குறித்துக் கொள்ளுங்கள்.
- எழுத்துமூல முறைப்பாடு: உங்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஆதாரங்களுடன் எழுத்துமூலமாகப் (𝑾𝒓𝒊𝒕𝒕𝒆𝒏 𝑪𝒐𝒎𝒑𝒍𝒂𝒊𝒏𝒕) புகார் அளியுங்கள்.
- 𝑪𝒚𝒃𝒆𝒓 𝑪𝒓𝒊𝒎𝒆 விசாரணை: உங்கள் புகாரை உடனடியாக 𝑪𝒚𝒃𝒆𝒓 𝑪𝒓𝒊𝒎𝒆 (சைபர் குற்றப் பிரிவு) விசாரணைக்கு அனுப்புமாறு பொலிஸாரிடம் வலியுறுத்திக் கோரலாம்.
தேவையானால் 𝑪𝒚𝒃𝒆𝒓 𝑪𝒓𝒊𝒎𝒆 பிரிவுக்கு விசாரணைக்காக அனுப்புமாறு கோரலாம்.