அனோஜனின் மரண தண்டனை தீர்ப்பு குறித்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் - சுமந்திரன் வலியுறுத்து

#SriLanka #M. A. Sumanthiran #Foriegn #Ministry #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #SivarasaAnojan #DeathPenalty
Thamilini
1 hour ago
அனோஜனின் மரண தண்டனை தீர்ப்பு குறித்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் - சுமந்திரன் வலியுறுத்து

அனோஜனுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் ஊடாகவே செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில், வெளிவிவகார அமைச்சு இத்தண்டனைத் தீர்ப்பு குறித்து உடனடியாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். 

 தமிழ்பேசும் மக்களின் பேரவை சார்பில் சவுதி அரேபிய தூதரக உயர்மட்ட அதிகாரிகளைச் சந்திப்பதற்கு நேரம் கோரவிருப்பதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

  இதுபற்றிக் கருத்துரைத்த தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அனோஜனின் குடும்பத்தினர் வெளியிட்ட விபரங்களை அடிப்படையாகக்கொண்டு இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் தூதுவர் இல்லாத போதிலும், அதிகாரத்திலுள்ள உயர்மட்டப் பிரதிநிதியை உடனடியாகச் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் கோரவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

 அதேவேளை அனோஜனுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் ஊடாகவே செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில், வெளிவிவகார அமைச்சு இத்தண்டனைத் தீர்ப்பு குறித்து உடனடியாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவேண்டும். 

அனோஜன் தனது சமூக ஊடகப் பதிவை சில நிமிடங்களிலேயே நீக்கிவிட்டு, காணொளி ஊடாகப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் என்ற செய்திகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்படவேண்டியவை ஆகும். வேதனையை ஏற்படுத்தக்கூடிய ஒரு கருத்து, ஒரு மனிதன் மனம் திருந்தி, தனது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை இல்லாமலாக்கிவிடக்கூடாது. 

 ஒரு இஸ்லாமியனாக அல்லாஹ்வின் அளப்பரிய கருணை மீது நான் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். 'அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன்' என்றே நாம் அல்லாஹ்வைப் போற்றுகிறோம். நாம் மனிதர்களின் பலவீனங்களை அணுகும்போது, மேற்சொன்ன நற்பண்புகளே நம்மை வழிநடத்தவேண்டும். ஒருவரது நம்பிக்கை மற்றும் உண்மையான மனமாற்றம் குறித்த இறுதித்தீர்ப்பு எல்லாம் வல்ல இறைவனுடையதாகவே இருக்கவேண்டும்.

 இந்நிலையில் கருணை காண்பித்து அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு நான் சவுதி அரேபிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். 

அத்தோடு அனோஜனுக்கு அவசியமான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், உடனடி இராஜதந்திர தலையீடுகளை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன். நீதியில் கருணைக்கும் இடமிருக்கவேண்டும். 

அனோஜன் அவரது குடும்பத்தினரிடம் திரும்பிச்சென்று அவரது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புக்குத் தகுதியானவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!