220 ரூபாய் ஆக இருந்த வரி 1420 ரூபாயாக அதிகரிப்பு வியாபாரிகள் பாதிப்பு வல்வெட்டித்துறை சந்தையில் அநீதி!

#SriLanka #Jaffna #Market #Tax #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
220 ரூபாய் ஆக இருந்த வரி 1420 ரூபாயாக அதிகரிப்பு வியாபாரிகள் பாதிப்பு வல்வெட்டித்துறை சந்தையில் அநீதி!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர சபையின் மரக்கறி சந்தையில் அநீதி நடப்பதாக சந்தை வியாபாரி ஒருவர் நகர சபைக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளார்.

 அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். 

 அவர் மேலும் தெரிவித்ததாவது,  கடந்த பல வருடங்களாக 220 ரூபாவாகவிருந்த நிலவாடகை திடீரென 1420 ரூபாய் வாக அதிகரிக்கப்பட்டதனால் தான் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் வல்வெட்டித் துறை நகர சபைக்கு எழுத்து மூலம் பல தடவை அறிவித்தும், சபை தன் தரப்பு நியாயம் எதனையும் கேட்காமல் தான் வரி செலுத்துவதில்லையென்று தன்னுடைய வியாபார பொருட்களை வலு கட்டாயமாக எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். 

 மேலும் நில வாடகையை குறைப்பதற்காக குறைந்த நிலப்பரப்பை தருமாறு கோரியபோது அவ்வாறு அனுமதிப்பதாக தெரிவித்து விட்டு இதுவரை அவ்வாறு மேற்கொள்ளவில்லையென்றும், தான் தனது வருமானத்திற்கு ஏற்ற வகையில் குறைந்த சதுர அடி நிலத்தினை வாடகைக்கு பெற்று அதற்குரிய வரியை செலுத்துவதற்கு முயற்சித்த போதும் சந்தை குத்தகை பெறுபவர் தன்னிடம் வரியை பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 ஆனால் தான் வரி செலுத்தவில்லை என்கின்ற குற்றச்சாட்டை வல்வெட்டித்துறை நகர சபைக்கு தெரிவித்திருந்த நிலையில் நகர சபையானது சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய வியாபார பொருட்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றதாகவும், தான் இப்போது எந்த வித தொழிலும் மேற்கொள்ளாது உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

  தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!