நானுஓயாவில் நடந்த சாலை விபத்தில் 34 வயது பெண் மரணம்
#Death
#Accident
#Women
#NuwaraEliya
#LANKA4
#L4
Prasu
1 hour ago
நானுஓயாவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயது குணசேகரம் திவ்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொழில் நிமித்தம் காரணமாக நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் 42 வயதான வேன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.