மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!
இந்தியாவின் - மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் இன்று (19) வெளியாகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் , திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய 2 தனித் தொகுதிகளுக்கும் எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டெம்பர் 9 ஆம் திகதியில் தொடங்கி செப்டெம்பர் 16 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இதில் மதுராந்தகத்தில் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முறையான ஆவணங்கள் இல்லாத 20 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 28 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதேபோல், தாராபுரத்தில் 51 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 30 மனுக்கள் ஏற்கப்பட்டு, 21 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று முடிந்த நிலையில், மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் (19) நிறைவடைகிறது.
மேலும், இறுதி வேட்பாளர்களின் பட்டியலும் இன்று மாலை வெளியிடப்பட்டு, சின்னமும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.