வெள்ளை மாளிகைக்குள் நுழைய மூன்று முக்கிய ஊடகங்களுக்கு தடை விதித்த டிரம்ப்
CNN, MS NOW மற்றும் Politico ஆகிய ஊடகங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது நிர்வாகம் குறித்த இந்த ஊடகங்களின் செய்தி வெளியீட்டு முறை குறித்து அதிருப்தி தெரிவித்து, டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.
"தொடர்ந்து 'போலிச் செய்திகளை' (FAKE NEWS) வெளியிடுவதன் விளைவாக, 'போலிச் செய்தி' ஊடகங்களான CNN, MSNOW ஆகியவற்றை வெள்ளை மாளிகையிலிருந்து உடனடியாகத் தடை செய்கிறேன் என்பதை அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்!" என்று டிரம்ப் எழுதியிருந்தார்.
"அமெரிக்க அதிபர், டிரம்ப் நிர்வாகம் அல்லது அமெரிக்கா குறித்துச் செய்தி வெளியிடும்போது, ஊடகங்கள் தொடர்ந்து கற்பனையான கதைகளையும் பொய்களையும் எழுதவோ அல்லது செய்தியாக வெளியிடவோ கூடாது. இது போன்ற பிற 'போலிச் செய்தி' ஊடகங்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.