சிவராசா அனோஜன் குறித்து ஒரு உண்மையான இஸ்லாமிய உடன்பிறப்பின் பதிவு

#Facebook #Muslim #LANKA4 #L4 #SivarasaAnojan #DeathPenalty
Prasu
4 hours ago
சிவராசா அனோஜன் குறித்து ஒரு உண்மையான இஸ்லாமிய உடன்பிறப்பின் பதிவு

சினிமா தியேட்டர், சூதாட்ட விடுதி, சாரயக்கடை, குஜால் நடனம் என பல விடயங்களை சவுதியில் அரங்கேற்றிவிட்டு இப்போது ஒரு அப்பாவிக்கு மரண தண்டனை வழங்கியிருப்பது குறித்து உலக முஸ்லீம்கள் அனைவரும் வெட்கப்படவேண்டும்.

அந்த முகநூல் பதிவை மொழிமாற்றம் செய்து தண்டனை வாங்கிக் கொடுக்கும் முடிவுடன் சவுதி அதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்து, மரண தண்டனை கிடைக்கும் அளவுக்கு வால்ப் பிடித்த அவர்கள் இனியும் நிம்மதியாக உறங்க முடிகிறது என்றால் அத்தகையவர்களுடன் நாம் மிகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

சவுதியின் இந்த தீர்ப்பு நியாயமற்றது என்பதை விட, இந்த தீர்ப்பு முஸ்லிம்களைப் பற்றி அடுத்தவர்களிடம் எத்தகைய மனப் பதிவுகளை உருவாகியிருக்கும் என்பதை சவுதியோ மற்றவர்களோ யோசித்துப் பார்த்திருப்பார்களா என்பது தெரியவில்லை.

ஒரு முகநூல் பதிவிற்காக இந்தத் தண்டனை மிக மிக அதிகம் என்பது மட்டுமன்றி தண்டனை வாங்கிக்கொடுக்க உதவிய அனைவருக்கும் அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்த சாபமும் நிச்சயமாக உரித்தாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!