அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப் பட்டி: நாளை முதல் கடும் சட்டம்.

#SriLanka #Seat #LANKA4 #Highway #vehicle #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப் பட்டி: நாளை முதல் கடும் சட்டம்.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களில் ஆசனப் பட்டி அணிவதை கட்டாயமாக்கும் சட்டம் நாளை (19) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக வழங்கப்பட்டிருந்த சுமார் ஒரு வருட சலுகைக் காலம் இன்றுடன் நிறைவடைவதால், நாளை முதல் ஆசனப் பட்டி அணியாமல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் அமரும் அனைத்து பயணிகளும் கட்டாயம் ஆசனப் பட்டிகளை அணிய வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

ஆசனப் பட்டி அணிவது அபராதம் அல்லது சட்ட நடவடிக்கைக்காக மாத்திரம் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும், சாரதிகள் மற்றும் பயணிகளின் உயிரைப் பாதுகாப்பதே இதன் பிரதான நோக்கம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பழைய வாகனங்களில் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாதிருந்த நிலையில், அவற்றை பொருத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த இறுதி சலுகைக் காலமும் இன்றுடன் நிறைவடைவதாக வீதி பாதுகாப்பு பற்றிய தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!