முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான மாணவர் மாநாடு

#SriLanka #Student #Mullaitivu #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான மாணவர் மாநாடு

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய மாணவர் தூதுவர் மாநாட்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட மாணவர் தூதுவர் முன்மொழிவுகள் மாநாடு பண்டாரவணியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாடு, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ம. வினோத் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.

பாடசாலை மட்டத்தில் சிறுவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதுடன், அவர்கள் எதிர்கொள்ளும் சிறுவர் பாதுகாப்பு பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளை முன்வைப்பதே மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.

இதன்போது, பாடசாலை மட்டத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள், மாணவத் தலைவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், பாடசாலைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, சிறுவர் பாதுகாப்புக்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாணவத் தலைவர்கள், ஆசிரியர்கள், பிரதேச மற்றும் மாவட்ட மட்ட அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!