தபால் சேவையை நவீனமயமாக்க புதிய திட்டம்

#SriLanka #government #LANKA4 #service #Postal #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
தபால் சேவையை நவீனமயமாக்க புதிய திட்டம்

‘வளமான நாடு – அழகிய வாழ்க்கை’ என்ற அரசின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை தபால் சேவையை நவீனமயமாக்கும் விரைவு வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் ஊடாக, தபால் துறையின் பௌதிக மற்றும் மனித வளங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சுமார் 56 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு புதிய தபால் கட்டடம் எதிர்வரும் 18ஆம் திகதியும், யாழ்ப்பாணம் கைதடி புதிய தபால் கட்டடம் 19ஆம் திகதியும் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவுள்ளன.

மேலும், 32 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புதுக்குடியிருப்பு புதிய தபால் நிலைய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

அதன் நிர்மாணப் பணிகளை 2027 ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தபால் சேவையின் உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் வகையில், வாகனக் கொள்வனவுக்கு 588 மில்லியன் ரூபாயும், CCTV அமைப்புகளுக்கு 27 மில்லியன் ரூபாயும், மேசைக்கணினிகளுக்கு 74 மில்லியன் ரூபாயும், மடிக்கணினிகளுக்கு 101 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், 657 விரல் அடையாள இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்காக 31 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு, பொலன்னறுவை, மத்திய அஞ்சல் பரிமாற்றகம் மற்றும் அஞ்சல் தலைமையகம் ஆகியவற்றில் 24 மில்லியன் ரூபாய் செலவில் சூரிய மின்சக்தி அமைப்புகள் பொருத்தும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!