பல்வேறு தரப்பினரின் பங்கேற்புடன் மரநடுகை செயற்திட்டம்
கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் இருந்து பரந்தன் வரையான வீதியோரப் பகுதியில் மரநடுகை செயற்திட்டம் இன்று (16) கரைச்சி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பசுமையான சூழலையும் ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த செயற்திட்டத்தில், மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி நளாயினி இன்பராஜ், RHDS அலுவலக வைத்திய அதிகாரி, வலயக் கல்விப் பணிப்பாளர், சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் கொமர்ஷல் வங்கி முகாமையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கௌரவ தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினரும் கரைச்சி கிராம அபிவிருத்திச் சங்க ஒன்றியத்தின் தலைவருமான பெ. ரவிச்சந்திரன் அவர்களும் , வர்த்தகர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.