அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு – 6 இடங்களில் சோதனை!
#SriLanka
#LANKA4
#corruption
#Case
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனியார் பாடசாலை நிர்வாகிகளிடமிருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் பெற்றதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, திருச்சி தென்னூரில் உள்ள அன்பில் மகேஸின் வீட்டிலும், சென்னை மற்றும் திருச்சியில் அவருடன் தொடர்புடைய மேலும் 5 இடங்களிலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டுக்கு வெளியே திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் திரண்டதால், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.