நாடு முழுவதும் சுமார் 10 நாட்களுக்கு தொடர் மழை - முன்னெச்சரிக்கை தொடர்பில் அறிவுறுத்தல்

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
நாடு முழுவதும் சுமார் 10 நாட்களுக்கு தொடர் மழை - முன்னெச்சரிக்கை தொடர்பில் அறிவுறுத்தல்

நாடு முழுவதும் சுமார் 10 நாட்கள் மழையுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

அத்துறையின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்னே இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு கூறினார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், எல் நினோ சூழ்நிலையை எதிர்கொள்ள அனைத்தும் தயாராக இருந்தாலும், எதிர்காலத்தில் கனமழை, நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் என்ற முன்னறிவிப்பிற்கு ஏற்ப ஆயத்தப் பணிகள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் வங்காள விரிகுடாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அடிக்கடி கொந்தளிப்புகள் ஏற்படும் என்றும், எல் நினோ சூழ்நிலையின் போது இது தீவிரமடையக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

டிசம்பர் மாதத்தில் நாட்டின்வடகிழக்குப் பகுதியில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!