உலகளாவிய குளிரூட்டல் உறுதிமொழி பேரவையில் சுற்றாடல் பிரதி அமைச்சர் பங்கேற்பு

#SriLanka #Minister #LANKA4 #environment #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
உலகளாவிய குளிரூட்டல் உறுதிமொழி பேரவையில் சுற்றாடல் பிரதி அமைச்சர் பங்கேற்பு

உலகளவில் வேகமாக அதிகரித்து வரும் கடுமையான வெப்பநிலை அபாயத்தை எதிர்கொள்வதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்ததும் நிலையானதுமான குளிரூட்டல் தீர்வுகளை சர்வதேச மட்டத்தில் ஊக்குவிக்கும் நோக்கில், ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் திட்டம் (UNEP) மற்றும் Cool Coalition அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘உலகளாவிய குளிரூட்டல் உறுதிமொழி பேரவை 2026’ நிகழ்வில் சுற்றாடல் பிரதி அமைச்சர் அந்தோன் ஜயக்கொடி பங்கேற்றுள்ளார்.

‘அறிவியலில் இருந்து குளிரூட்டல் மற்றும் கடுமையான வெப்பத்தைத் தாங்கும் திறன் தொடர்பான நடவடிக்கைகளுக்கான நாடு மற்றும் நகர முன்னுரிமைகள் வரை’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற பேரவையின் முதலாவது நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கடுமையான வெப்பநிலை மற்றும் குளிரூட்டல் தொடர்பான அறிவியல் தகவல்களை ஆராய்வதற்கும், இலங்கையின் முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கும், நடைமுறைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பான அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!