மீண்டும் அதிகரிக்கக்கூடும் டெங்கு பாதிப்பு – எச்சரிக்கை

#SriLanka #LANKA4 #Warning #Case #Dengue #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
மீண்டும் அதிகரிக்கக்கூடும் டெங்கு பாதிப்பு – எச்சரிக்கை

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பூச்சியியல் ஆய்வுகளின் மூலம், டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்கள் தொடர்ந்தும் கண்டறியப்பட்டு வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிலவிய அதிக ஆபத்தான சூழ்நிலையுடன் ஒப்பிடுகையில், தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் தினசரி 1,200 முதல் 1,300 வரையான டெங்கு நோயாளர்கள் பதிவாகிய நிலையில், சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பினால் அந்த எண்ணிக்கை தற்போது தினசரி சராசரியாக 159 ஆகக் குறைந்துள்ளது.

எனினும், எதிர்வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை, எல் நினோ காலநிலை மற்றும் இடைப் பருவமழை காரணமாக டெங்கு மீண்டும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தடுக்கும் வகையில், நேற்று முதல் ஒரு வார கால சிறப்பு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாகாணங்கள், 15 மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், மாவட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருவதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வைத்தியர் கபில கண்ணங்கர எச்சரித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!