2040ம் ஆண்டுக்குள் தனியார் துறைக்கு ஓய்வூதியம் - 2050ம் ஆண்டுக்குள் அனைத்து இலங்கையர்களுக்கும் ஓய்வூதியம்

#SriLanka #people #LANKA4 #Astrologer #Suthakar #Pension #L4
Prasu
1 hour ago
2040ம் ஆண்டுக்குள் தனியார் துறைக்கு ஓய்வூதியம் - 2050ம் ஆண்டுக்குள் அனைத்து இலங்கையர்களுக்கும் ஓய்வூதியம்

"2040ம் ஆண்டுக்குள் தனியார் துறைக்கு ஓய்வூதியம். 2050ம் ஆண்டுக்குள் அனைத்து இலங்கையர்களுக்கும் ஓய்வூதியம்" இந்தக் கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட வேண்டும். 

அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவம் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும் இந்த அரசாங்கம், அதை நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

ஒவ்வொருவரும் தமக்காகச் செய்யும் பணி, இந்த நாட்டிற்கான பணியும்கூட என்பதை நாம் உணர வேண்டும். அரசு ஊழியர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெறுகிறார்கள், சமூகத்தில் ஓய்வூதியம் பெறும் இவர்களே சிறந்தவர்கள் அல்லது மிக உயர்ந்தவர்கள் என்ற கருத்து மாற வேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு குடிமகனும் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளவும், நிதிப் பாதுகாப்பைப் பெறக்கூடியவராக இருக்க வேண்டும். 

பல தனியார் துறை ஊழியர்கள் தங்கள் சேமிப்பைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார்கள் அல்லது திருமணம் செய்துகொள்கிறார்கள், அதன் பிறகு அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு (வருமானம்) இருப்பதில்லை. 

அவர்கள் தங்கள் முதுமைக் காலத்தில் அடிமைகளைப் போலத் தங்கள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் சார்ந்து வாழ வேண்டியுள்ளது. 

அரசாங்கம் தற்போது சொற்பமான முதியோர் ஓய்வூதியத்தை வழங்குகிறது, அது போதுமானதல்ல. எனவே நாடு அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரு ஓய்வூதிய முறையைச் செயல்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் பணிபுரியும் தனிநபர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்குப் பயனளிக்கவும் அரசாங்கம் பல திட்டங்களை அறிவித்திருப்பதும் அதேவேளை உள்ளூர் தனியார் ஊழியர்களுக்கான சிறப்புச் சலுகைகளை அறிவிக்காமல் அவர்களை ஊக்குவிக்காமல் இருப்பதும் குறிப்பாக வேதனையளிக்கிறது. 

(உள் ஊரில் வேலை செய்பவர்களுக்கே முன் உரிமை கொடுக்கவேண்டும் நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியே மிக முக்கியம்) உண்மையில் அரசாங்கம் தனியார் துறை ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வேலையில்லாத இல்லத்தரசிகளின் தேவைகளைப் புறக்கணித்துள்ளது. 

வேளாண்மை மற்றும் தொழில்துறையில் சுயதொழில் செய்பவர்களுக்கு முதுமையில் நம்பகமான வருமானம் இல்லாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. சிலர் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என்பதால், நான் இங்கு குறிப்பிட்ட தொழில்களைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை. 

தற்போது, ​​தனியார் துறை #ஊழியர்களுக்கு முதலாளிகள் 12 சதவீதமும், ஊழியர்கள் 8 சதவீதமும் செலுத்துகின்றனர். (#EPF )ஆண்கள் ஓய்வு பெறும்போது இந்தத் தொகையை மொத்தமாகப் பெறலாம். 

பெண்கள் பணியிலிருந்து விலகும்போதோ அல்லது திருமணம் செய்துகொள்ளும்போதோ அதை எடுத்துக்கொள்ளலாம். அரசாங்கம் இதை மாற்றி, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய முறையைப் போன்ற ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும். 

வேலை வழங்குபவர் 12 வீதம் ஊழியர் 8 வீதம் எனவும் மொத்தமாக 20 வீதம் செலுத்தப்படுகிறது தனியார் துறை ஊழியர்கள் தற்போதைய 8 சதவீதத்துடன் கூடுதலாக 4 சதவீதமும், செலுத்தினால், மொத்தப் பங்களிப்பு 24 சதவீதமாக இருக்கும். முதலாளிகளும் ஊழியர்களும் தலா 12 சதவீதம் செலுத்துவார்கள்.

பத்து வருடப் பங்களிப்புகளுக்குப் பிறகு, செலுத்தப்பட்ட பங்களிப்புகளின் அடிப்படையிலோ அல்லது அத்தகைய நீண்ட பங்களிப்புக் காலத்திற்குப் பிறகு பெறப்பட்டிருக்கக்கூடிய ஓய்வூதியத்தின் அடிப்படையிலோ ஓய்வூதியம் கணக்கிடப்படலாம். அனைத்து முதியவர்களுக்கும் ஒரு ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். 

இன்றுவரை, பல தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு ஓய்வூதிய மாதிரிகளை வழங்கியுள்ளன, ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. 

எனவே, 2050ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். 

மேலும், விபத்தின் காரணமாகப் பணிபுரிய இயலாதவர்களுக்கும் அல்லது பணிபுரிய நிர்பந்திக்கப்படுபவர்களுக்கும் இழப்பீடு வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள், இதில் முக்கியப் பங்காற்றுவதும் இன்றியமையாதது. 

அரசாங்கம் அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கையை ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையில் இந்த முன்மொழிவை நான் முன்வைக்கிறேன். 

தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் எனது கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, அனைவருக்கும் இந்த அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு:

  • (EPF வேலைவழங்குபவர் 12% ஊழியர் 8% ETF முதலாளி 3 % இதுவே தற்போதைய நடைமுறை)
  • புதியநடைமுறையாக எனது முன்மொழிவு (EPF வேலைவழங்குபவர் 12% ஊழியர் 12% ETF முதலாளி 3 % )

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு பல வழிகளில் மக்களுக்கான உதவித் திட்டங்கள், மானியங்கள் என்று வழங்குகிறது. இவை அனைத்துக்கும் தனித்தனி இலாகாக்கள், பணியாளர்கள் என்று இந்தத் துறைகளுக்கே பெரும் பணத்தைச் செலவு செய்து மக்களுக்கான பணத்தை வழங்க வேண்டியுள்ளது.

அதேவேளை மக்களைத் தரம் பிரிப்பதிலும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஒரு நபருக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக உணவு, உடை, போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரக் கட்டணம் இப்படி எல்லா வகையான செலவுகளையும் அரசு கணக்கிட்டு உள்ளது.

இக்கணக்கானது மக்களைப் பொருத்தவரையில் மிகவும் குறைவான தொகையாக மக்கள் விசனம் கொள்கின்றார்கள். சராசரியாக ஒரு தனி மனிதருக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபா என்கின்ற கணக்கில் அடிப்படையில் மாதாந்தம் 30,000 ரூபாக்கள் கிடைக்கக்கூடிய மாதிரியான ஓர் ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வர வேண்டும். 

இது வாழ்க்கைச் செலவுகளைப் பொறுத்து இந்தப் புள்ளியில் இருந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம். இதிலே அரசுக்கு இன்னும் ஒரு நன்மையும் உள்ளது. 

மக்கள் அனைவரும் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி வேலை செய்யும் பொழுது அவர்கள் வரி கட்டுவார்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி நாட்டில் உற்பத்தித் திறன், வேலைவாய்ப்பு எல்லாம் அதிகரிக்கும். 

சில இடங்களில் மக்கள் வேலைக்கான எந்த பதிவுகளும் இல்லாமல் வேலை செய்கின்ற தன்மை இல்லாமல் போகும். யாரும் பொய் சொல்லி அரசு பணங்களை அபகரிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இவை அனைத்தையும் தாண்டி ஒரு நாட்டின் உற்பத்தி திறனை வைத்தே அந்த நாட்டின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுகிறது. 

அதேபோன்று மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும் பொழுது மேலை நாடுகளுக்கு ஈடான வாழ்க்கைத் தரத்தை கொண்ட உலகில் மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் மிகக் கூடிய விரைவில் வளர்ந்துவிடும். இதற்கான நிதியை எப்படி ஒதுக்குவது அல்லது எங்கிருந்து திரட்டுவதென்று கூட அரசு இதைப் பெரும் சுமையாக நினைக்கலாம். 

ஆனால் புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற சிலர் இலங்கையில் வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்டோருக்கு உதவுவதற்குத் தயாராக உள்ளார்கள். மேலும் நமது நாட்டில் இப்படி ஒரு திட்டம் வருகிறது என்றால் நிச்சயமாகப் பலர் உதவுவார்கள் என்கின்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

பொது உதவியை அதாவது பொது நிதியைச் சேகரிப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை. மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்றால் அதை நேரடியாகவே அரசு பெற்று மக்களுக்குப் பகிர்ந்து அளிப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை. 

இந்த வரலாற்று மாற்றத்தைத் தற்பொழுது ஆட்சியில் இருக்கின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விரும்பும் உண்மையான அரசியல்வாதிகள், தலைவர்கள் உள்ள இந்த அரசே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மிகத் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.

செய்தி : சோதிடர் சுதாகர் சுவிஸ்

மேலதிக தகவல்:

புலம்பெயர் வாழ் மக்கள் தமது பணத்தை இலங்கையில் வைப்பிலிடலாம் தமக்குத் தேவையான பொழுது அதே நாணயத்தில் வைப்ல் இடலாம். 

வைப்பில் தொகையைத் தங்கு தடையின்றிப் பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற நிலைமை இருந்தால் இங்கே பொதுவாக வைப்புத் தொகைக்கு 0.5 % வட்டியே உள்ளது. 

இலங்கையில் ஒரு வீத வட்டி கிடைக்கும் என்றாலே பலர் தமது பணத்தை இலங்கையில் வைப்பிலிடுவார்கள். சீனாவின் வெற்றிக்கு இப்படியான ஓர் நடைமுறையும் காரணமாக இருந்தது. 

அதன் பின்பே பல வெளிநாட்டு முதலீடுகள் அங்கு சென்றன. இவை அனைத்தும் வெறும் இரண்டு பக்கக் கட்டுரையில் முடிக்கப்படுகின்ற விடயம் அல்ல என்பது எனக்கு நன்கு தெரியும். 

இருந்தாலும் மனமுண்டானால் மார்க்கம் உண்டு என்கின்ற அடிப்படையில் எனது முன்மொழிவு.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!