சட்டத்தின் முன் அனைவரும் சமம் – ஜனநாயகத்தின் அடிப்படை சட்டத்தின் ஆட்சி!

#SriLanka #PrimeMinister #Law #LANKA4 #ADDA #Harini Amarasooriya #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
சட்டத்தின் முன் அனைவரும் சமம் – ஜனநாயகத்தின் அடிப்படை சட்டத்தின் ஆட்சி!

“ஜனநாயகம் என்பது வெறுமனே காகிதத்தில் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல. அது ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உண்மையான நம்பிக்கையாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு மக்கள் எடுத்த தீர்மானம் தற்போது வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் அடிப்படையாக சட்டத்தின் ஆட்சி காணப்படுவதுடன், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்றும், எந்தவொரு நபரும் சட்டத்திற்கு மேலானவராக இருக்க முடியாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்ட நிலையில், அதனை மீண்டும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பல்வேறு நடைமுறை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு, தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு நேற்று (15) ராஜகிரிய மத்திய வங்கி கற்கை மையத்தில் நடைபெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4