வளிமண்டலத்தில் தளம்பல் நிலை - நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்
இலங்கையை அண்மித்த பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் தளம்பல் நிலை தொடர்ந்து காணப்படுகிறது.
இதன் தாக்கத்தினால், இன்று (15) மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மேகமூட்டமான வானிலையுடன் கூடிய மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே