சிறிய, நடுத்தர அரிசி ஆலைகளுக்கு நெல் கொள்வனவு நிதி வழங்கல்.

#SriLanka #rice #Province #LANKA4 #Paddy #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY
Abi
1 hour ago
சிறிய, நடுத்தர அரிசி ஆலைகளுக்கு நெல் கொள்வனவு நிதி வழங்கல்.

நெல் சந்தைப்படுத்தல் சபையைத் தவிர்த்து, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நிதி வழங்கி நெல் கொள்வனவு செய்யும் திட்டத்தின் கீழ், கிளிநொச்சி மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக விண்ணப்பித்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வும், அவர்களுடனான கலந்துரையாடலும் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நெல் கொள்வனவு தொடர்பான நடைமுறைகள், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதில் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கமக்காரர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த நிதியின் ஊடாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டு, நெல் சந்தைப்படுத்தலை வலுப்படுத்துவதற்கும் விவசாயிகளுக்கு உரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4