62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அமுலில்

#SriLanka #Health #Dengue #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அமுலில்

நாட்டில் 62 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளில், விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு வரும் 19 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கர, தெரிவித்துள்ளாார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 1,200 முதல் 1,300 வரை என்ற உயர் மட்டத்தில் இருந்துவருவதை சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், அனைத்துத் தரப்பினரின் கூட்டு முயற்சியால், தற்போது தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை 100 முதல் 200 வரை என்ற அளவிற்கு கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் கூறினார். 

எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்படும் மழைக்கால வானிலையால், தேங்கி நிற்கும் நீரினால் கொசுக்கள் பெருகும் அபாயம் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்றும் இதன்காரணமாக இந்த விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும் அறிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4