செம்படம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 2,146 டெங்கு தொற்றாளர்கள் பதிவு

#SriLanka #Hospital #Dengue #Patients #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
செம்படம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 2,146 டெங்கு  தொற்றாளர்கள் பதிவு

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 97,637 டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

 அப்பிரிவின் தகவலின்படி, இதே காலப்பகுதியில் டெங்கு காரணமாக 74 பேர் உயிரிழந்துள்ளனர். 

 இதற்கிடையில், செப்டம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில் 2,146 டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

 கம்பஹா மாவட்டத்தில் அதிகளவிலான டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அங்கு இவ்வருடத்தில் இதுவரை 20,742 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

 கொழும்பு மாவட்டம் 19,235 சம்பவங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது.

 அதேவேளை, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 7,291 மற்றும் 6,247 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4