வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் - நாட்டின் சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்
வளிமண்டலத்தில் நிலவும் குறைந்த அழுத்தத் தன்மை காரணமாக, இன்று (14) மேல், மத்திய, சபரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேல், மத்திய, சபரகமுவ, தென், வட-மத்திய மற்றும் வட-மேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே